காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 ஜூலை, 2014

அகப்பொருள் மரபுகள்

முனைவர் பெ.மாதையன் அவர்கள் இரண்டாண்டுகளுக்கு முன்பு அகப்பொருள் மரபுகள் குறித்து நடத்திய வகுப்பின் ஒரு பகுதி பதிவு காணொலியாக...




சனி, 5 ஜூலை, 2014

பக்கத்துவீட்டு மரத்து எல...

               முனைவர் வேல.நெடுஞ்செழியன் எழுதி, அவர் மகன் வே.குழல்வேலன் பாடிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல். செஞ்சி நிகழ்வு ஒன்றில் வே.குழல்வேலன் பாடியபோது படப்பதிவு செய்தது இது. 

                                       இந்த பாடல் முனைவர் வேல.நெடுஞ்செழியன் வெளியிட்ட ஏட்டுப்பூ எழுதினப்பூ  பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.


narumugai jra

சனி, 14 செப்டம்பர், 2013

குறிஞ்சி விழா பதிவுகள்




செஞ்சியில் 13.01.2013 அன்று மாலை குறிஞ்சி விழா - பொங்கல் கலை இரவு நடைபெற்றது. அந்த நிகழ்வின் சில பகுதிகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன.


01. வேலூர் - முகில் - குழுவினரின் நாட்டுப்புற இசை : காணொலி



02. புதுகை - பூபாலம் குழுவினரின் புதிய கோணங்கிகள் நிகழ்ச்சி

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

சங்கரதாஸ் சுவாமிகள்


சங்கரதாஸ் சுவாமிகள் குறித்து குட்டி விகடனுக்காக அ.பாலச்சந்தர் அளித்த குரல் குறிப்புகள்



ஞாயிறு, 13 மே, 2012

பாடகர் செந்தில் வேலன்



பாடகர் செந்தில் வேலன் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் - அருண் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வராக பணியாற்றுகிறார்.

அண்மையில் களவாணி படத்தில் பிரளயன் எழுதிய நாடகப்பாடல் ஒன்றைப் பாடியிருந்தார் (இந்த பாடலைக் கேட்க அருகே உள்ள லிங்கைச் சொடுக்குக) http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGSKU0009'&lang=ta

10 ஆண்டுகளுக்கும் மேலாக த.மு.எ.க.ச மேடைகளில் வைகறை கலைக்குழுவினரோடும், தனியாகவும் பாடிவருகிறார். இவர், தமிழ் திரையுலகம் இன்னும் பயன்படுத்தவேண்டிய சிறந்த ஆளுமை.

06.05.2012 அன்று நறுமுகை சார்பில் செஞ்சியில் நடைபெற்ற நாவல் குமாரகேசனின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவில் அவர் நான்கு பாடல்கள் பாடி அனைவரையும் கவ்ர்ந்தார்.

அவரைச் சிறப்பிக்கும் விதமாக அப்பதிவை இங்கே பதிவு செய்கிறேன். 
( அவருடன் தொடர்புகொள்ள... 9442311491 )

1.அழுகுரல் சத்தம்...


http://www.youtube.com/watch?v=ETpdeJe96so
2.ஆடல் பாடல் பேச்சில் எல்லாம்...


3. எனக்கெனவே ஒருத்தியவ....

இப்பாடலை எழுதியவர் : பேரா. முனைவர் வே. நெடுஞ்செழியன், திருவண்ணாமலை.
( குறிப்பு: விரைவில் பேராசிரியரின் பாடல்கள் ஒலிப்பேழையாக வெளிவர இருக்கிறது. )



4. மல்லுவேட்டிக் கட்டிக்கிட்டு...
.








திங்கள், 12 செப்டம்பர், 2011

பனமலை




பல்லவர்களின் கட்டடக்கலைக்கு பல உதாரணங்கள் இருந்தபோதும் செஞ்சியை அடுத்த பனமலையில் அமைந்துள்ள பனமலைநாதர் (தாளகிரீசுவரர்) திருக்கோயில் தனி சிறப்புகள் பெற்றது. குடைவரைக்கோயில்களையே கட்டிவந்த பல்லவ்ர்கள் மலைமீது கட்டிய முதல் கற்றளி (கற்களைக்கொண்டு எழுப்பிய கோயில்) இது.

செஞ்சியிலிருந்து சுமார் 22 கி.மீ தூரத்தில் உள்ள இக்கோயில் இராசசிம்மனால் இயற்கை எழில்கொஞ்சும் மலைமீது கட்டப்பட்டுள்ளது. இவனே காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலையும் கட்டியவன் ஆவான். அக்கோயில் கட்டுவதற்கு முன்னோட்டம் போல அமைந்த இக்கோயிலில் இம்மன்னன் காலத்து சிறப்பு வாய்ந்த ஓவியம் ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் இன்றும் காணக்கிடைக்கிறது.

சிவனது தாண்டவத்தைக் கண்டு தன்னை மறந்து ஆட்டத்தில் ஆழ்ந்து நிற்கும் பார்வதியின் உருவம் மட்டும் ஓவியமாக இன்று இக்கோயிலில் எஞ்சி நிற்கிறது. தொங்கல்கள் நிறைந்த விளிம்புகளைக் கொண்ட அழகான வண்ணக் குடையின் கீழே ஒரு காலை மடித்துச் சுவரில் வைத்து மற்றொரு காலைத் தரையில் ஊன்றிப் பார்வதி நிற்கிறாள். வேலைப்பாடு மிக்க மகுடம் அணிந்த தலை வலப்புறம் சாய்ந்துள்ளது. ஆட்டத்தில் ஆழ்ந்து போன நீண்ட கண்கள், வில்போன்ற புருவங்கள், கழுத்திலணிந்த ஆபரணங்கள், பூவேலை மிக்க இடையாடை ஆகியவை பார்வதியின் எழிற் கோலத்தை எடுப்பாகக் காட்டுகின்றன. பல்லவர் காலத்து அரச மகளிரின் எழிற்கோலத்தை இவ்வோவியம் காட்டுகிறது. எதிர் சுவரில் சிவன் பரிவாரங்களுடன் பார்வையிடுவது போல உள்ள ஓவியம் இன்று அழிந்த நிலையில் உள்ளது.





இந்த ஒவியதை தாண்டி பச்சைக்கல்லில் அமைந்த அம்மன் உருவம், மலைமீது அமைந்த அழகிய குளங்கள், எல்லாவற்றையும் தாண்டிய மனதிற்கினிய இயற்கை சூழல் என பேச நிறைய உள்ளன. இன்றும் இக்கோயில் ஆரியர் வசப்படாது மரபுவழி தமிழ் பூசாரிகளால் வழிபாடு நடத்தப்பெறுகின்றது என்பது கூடுதல் தகவல்.

இக்கோயிலுக்கு புதிய நண்பர்களுக்கு சுற்றிக்காட்டச் சில ஆண்டுகளுக்கு முன் சென்றபோது அந்த நண்பர் எடுத்த படம் அண்மையில் எனக்கு கிடைத்தது. அதை காணொளியாக இங்கே தருகிறேன்....