டாக்டர் பீட்டர் பெர்சிவல்
Dr. Peter Percivel (24.7.1803 - 11.07.1882)
Dr. Peter Percivel (24.7.1803 - 11.07.1882)
---------------------------------------------------------------
ஜெ.இராதாகிருஷ்ணன்,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை 5.
டாக்டர் பீட்டர் பெர்சிவல். |
தமிழியல் வரலாற்றில் எந்த
ஒரு மூலையில் நின்று பேசினாலும் தொல்காப்பியத்திலிருந்து தொடங்க முடிவது போல,
மறுமலர்ச்சித் தமிழியல் வரலாற்றின் எந்தவொரு பகுதியும் ஐரோப்பியர் வருகை,
19ஆம் நூற்றாண்டு அச்சு ஊடகம் என்பதாகவே தொடங்குகின்றது.
வணிகத்திற்காகவும் மதம் பரப்புதலுக்காகவும் வந்த ஐரோப்பியர்
அவர்களுக்காகச் செய்த ஒவ்வொன்றும் மொழியிலும், சமூகத் தளத்திலும்
நவீன வெளிகளை விரித்துள்ளன.
அந்த வகையில், ஒரு பாதிரியாராக
யாழ்ப்பாணத்தில் தன் வாழ்க்கையைத் தொடங்கி; கல்வியாளராகவும்,
சமூகவியலாளராகவும், அரசு ஊழியராகவும் லண்டன்,
கல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் தொடர்ந்து; இதழாளராகவும்,
மொழியியலாளராகவும், ஆய்வாளராகவும் வாழ்ந்து;
தமிழகத்திலேயே தனது வாழ்வின் இறுதி நாட்களை முடித்துக் கொண்ட முக்கியமான
ஆளுமை டாக்டர் பீட்டர் பெர்சிவல்.
19ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய தமிழறிஞர்கள் பற்றிய உரையாடல்
ஒவ்வொன்றும் பல தளங்களில் விரியும் சாத்தியப்பாடுகளை உள்ளடக்கி நிற்க, தமிழ்ப் புலத்தில் டாக்டர் பீட்டர் பெர்சிவலின் அழுத்தமான
பதிவுகள் பற்றிய அறிமுக உரையாடலாக இக்கட்டுரை அமைகின்றது.
சமயப் பணியாளராக...
தமிழகம் என்பது ஈழத்தமிழகத்தையும்
உள்ளடக்கியதாகக் கருதப்பட்ட 18ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து
தொடங்குகிறது பீட்டர் பெர்சிவலின் வரலாறு.
1804 முதல் 1818 வரையிலான
காலகட்டத்தில் இலங்கையில் லண்டன் மிஷன்,
சி.எம்.எஸ். மிஷன்,
அமெரிக்க மிஷினரிகள் எனப் பல்வேறு கிருத்துவ மிஷனரிகளும் கால்பதிக்கின்றன. அமெரிக்க மிஷனரிகளில் ஒன்றான வெஸ்லியன்
மெத்தடிஸ்ட் மிஷன் 1914இல் யாழ்ப்பாணத்தில் நிலைகொள்கிறது.
அதை நிர்வகித்து மதம் பரப்புவதற்காகவே 1926இல்
வந்து சேர்க்கிறார் பெர்சிவல்.
23 வயது இளைஞராக வருகை தந்த பீட்டர் பெர்சிவல் மூன்றாண்டுகளில் நன்கு தமிழ் கற்று,
சமயச் சொற்பொழிவுகள் - பிரச்சாரத் துண்டறிக்கைகள்
தயாரித்தல் என மிஷனரியின் தலைமைப் பதவிக்கு வருகிறார்.
இவரது சமயப் பிரச்சாரத் துண்டறிக்கைகள் தமிழகம் வரையிலும்
பரப்பப்பட்டுள்ளன. இவரது துண்டறிக்கையின் மூலமாகவே முதன்முதலில்
கிருத்துவை அறிந்தேன் என எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை பின்னாளில் குறிப்பிடும்
அளவு (முனைவர் வீ.ஞானசிகாமணி, 1978 ப.28) இவரது
சமயப் பரப்புரையும் துண்டறிக்கைகளும் பிரபலமடைந்துள்ளன.
இதன் பயனாகவே 1840இல் நான்காம்
விவிலியத்தின் திருத்திய மொழிபெயர்ப்புப் பணிக்கான குழுத்தலைவர் பொறுப்பு இவரைத் தேடி
வருகின்றது. தமது பள்ளியில் பயின்ற மாணவரான ஆறுமுக நாவலர் உதவியுடன்
1848இல் பெர்சிவல் இப்பணியை நிறைவுசெய்கிறார். இம்மொழிபெயர்ப்பைச் சரிபார்ப்பதற்றகாக ஆறுமுகநாவலரை அழைத்துக்கொண்டு பெர்சிவல்
சென்னை வருவதும், இதற்கு முன்பே 1829 முதல்
1832 வரை மூன்றாண்டுகள் கல்கத்தா சென்றதும் பெர்சிவல் வாழ்விலும் தமிழியல்
சூழலிலும் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.
பைபிள் மொழிபெயர்ப்பு...
பைபிள் மொழிபெயர்ப்பு...
தமிழில் தம்பிரான் வணக்கம் (1577) கிறிசித்தியானி வணக்கம் (1579) என்பனவாகச் சிறுசிறு மொழிபெயர்ப்புகள்
வந்தபோதும், முழுமையான தொடக்க மூல மொழிபெயர்ப்புகளாகக் கீழ்க்கண்டவர்கள்
செய்தவற்றைக் குறிப்பிட முடியும்.
1. சீகன் பால்கு (1863 - 1719) - 1714இல்
2. பெப்ரீஷயஸ் (1711 -1796) - 1773இல்
3. கிரேனியஸ் (1790 - 1838) - 1833இல்
2. பெப்ரீஷயஸ் (1711 -1796) - 1773இல்
3. கிரேனியஸ் (1790 - 1838) - 1833இல்
அரைநூற்றாண்டுகளுக்கும் மேலாகப் பெப்ரீஷியஸின் வேதாகம
மொழிபெயர்ப்பே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சூழலிலும், புதிய காலச்
சூழலுக்கு ஏற்ப எளிமைப்படுத்த வேண்டியும் பல்வேறு திருச்சபையினர்களும் (மிஷனரிகள்) ஏற்றுக்கொள்ளும்படியான ஒருமித்தப் பதிப்பு
உருவாக்கும் பொருட்டும் பெர்சிவல் தலைமையில் நான்காம் பைபிள் திருத்திய மொழிபெயர்ப்புக்
குழு 1840இல் அமைக்கப்பட்டது. இக்குழுவில்,
1. எபிரேய புலமையாளர் சாமுவேல் ஹச்சிங்ஸ் (Samuel Hutchings)
2. வேதப் புலமையாளர் எச்.ஆர்.ஹசிங்ஸ்டன் (H.R.Horly sington)
3. அகராதி புலமையாளர் வின்சுலோ (winslow)
ஆகியோர் இருந்தனர். தமிழறிவுக்காக ஆறுமுகநாவலரைச் சேர்த்துக்கொண்டு இக்குழு மொழிபெயர்ப்புப் பணியில்
ஈடுபட்டது.
1846 க்குப் பிறகு பெர்சிவல் தமது முழுநேரத்தையும்
செலவிட்டு ஆறுமுக நாவலரின் உதவியுடன் பைபிள் மொழிபெயர்ப்பை 1848இல் செய்து முடித்தார்.
சீகன்பால்கு மொழிபெயர்ப்பை வீரமாமுனிவர் எதிர்த்தார்,
பின்னாளில் தோன்றிய பவர் மொழிபெயர்ப்பை வேதநாயகசாஸ்திரி எதிர்த்தார்.
இந்த வரலாற்றின் மையமாகப் பெர்சிவல் மொழிபெயர்ப்பைச் சென்னை வேதாகமச்
சங்கம் எதிர்த்தது. தஞ்சை, திருநெல்வேலி
மதகுருமார்களும் குறைகூறினர். அவர்கள் கூறியவற்றில் முக்கியமானவை,
1. மொழிபெயர்ப்பு மூலநூலைப் பெரிதும் தழுவவில்லை.
2. யாழ்ப்பாணத் தமிழ் வேறு, தமிழகத்
தமிழ் வேறு. இது யாழ்ப்பாணத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
3. ’வருவேன்’ என்ற எதிர்கால வினைச் சொற்கள் ’வருகிறேன்’ என்ற நிகழ்கால வினைச்சொற்களாக குறிக்கப்பட்டுள்ளன.
4. இம்மொழிபெயர்ப்பில் வடசொல் மிகுதியாக உள்ளது.
வ.எ
|
பெப்ரீஷயஸ் பெயர்ப்பு
|
பெர்சிவல் பெயர்ப்பு
|
1
|
பொருத்தம்
|
சங்கற்பம்
|
2
|
பலிபீடம்
|
வேதரிகை
|
3
|
காணிக்கை
|
நிவேதனம்
|
இந்தக் குற்றச்சாட்டுகளின் மீதான விரிவான உரையாடல்கள்
நிகழ்த்தப்பட்டன.
குறிப்பாக - பைபிளில் இடம்பெறும்
இறைவனைக் குறிக்கும் சொல்லைச் சீகன் பால்கு ’சருவேசுவரன்’ எனவும், பெப்ரிஷியஸ் ’பராபரன்’எனவும், மொழிபெயர்க்க, பெர்சிவல்
’தேவன்’ என மொழிபெயர்த்திருக்கிறார். ’தேவன்’ என்பது இருபால் பொதுச்சொல். அது ’தேவர்கள்’ எனப் பன்மையையும் குறிக்கும். அது ஓரிறைக் கோட்பாட்டுக்கு
உகந்த சொல் அன்று. மேலும் இந்தியத் தொன்மங்களில் ’தேவர்கள்’ என்பது உபகடவுளர்களாவர். எனவே, இச்சொல் பொருத்தமற்றது எனவும், இது சைவசமயப் பற்றாளரான
ஆறுமுகநாவலரால் வன்ம நோக்கோடு கிறித்துவ வேதத்தில் புகுத்தப்பட்டது எனவும் வாதிடப்பட்டது.
பெர்சிவல் பதிப்புக்குப் பிறகும் வந்த பல்வேறு பதிப்புகளிலும்
- அவரின் ’தேவன்’ என்ற சொல்லாட்சியே, சர்வேசுவரன், பராபரன் என 150 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வந்த பெயர்களை
மாற்றி நிலைத்துவிட்டது.
வடமொழிச்சொற்கள் மிகுதி என்ற வாதமே தமிழகக் கிருத்துவ
அமைப்புகளில் வைக்கப்பட்ட நிலைத்த குற்றச்சாட்டாக இருந்தது. இதுவே,
வடமொழி, தமிழ்மொழி எனப் பிரித்துப்பார்க்கும் பல்வேறு
ஆய்வுகளுக்குத் தொடக்கமாக அமைந்தது. தனித்தமிழ் இயக்கத் தோற்றத்திற்கு
முன்னோடியாக அமைந்தது என்கிறார் சரோஜினி பாக்கியமுத்து. (விவிலியமும்
தமிழும் 1990 ப.168)
மேற்படி குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு,
பெர்சிவலின் மொழிபெயர்ப்பைச் ’சோதனை பதிப்பாக’க்
கொண்டு, புதிதாக ஒருமித்தப் பதிப்பாக, ’பவர்
திருத்தப்பதிப்பு’ (1871 இல்) கொண்டுவரப்பட்டது.
அதற்கும் பெர்சிவல் பதிப்பிற்கும் வடச்சொல் கையாளுகையில் பெரிய வேறுபாடு
இல்லை.
ªð£¼œ
|
ªð˜Cõ™ ªðò˜Š¹
|
ðõ˜ðFŠ¹
|
ªñ£ˆî ªê£Ÿèœ
|
15,716
|
15,575
|
îI›„ ªê£Ÿèœ
|
11,971
|
12,719
|
êñvA¼î„ ªê£Ÿèœ
|
2,994
|
2,856
|
மொழிபெயர்ப்பாளராக
பைபிள், மொழிபெயர்ப்பு,
பழமொழிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமை மட்டுமின்றி பெர்சிவல்,
பழமொழியைப் போல அமைந்த நீதி இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
குறிப்பாக ஔவையாரின் நீதி பாடல்கள்
மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். அவை சுருக்கத்திலும் அழகிலும் இணையற்றவை எனக் குறிப்பிடுகின்றார்.
(பெர்சிவல், 1843, முகவுரை). அவற்றையும், சாதி சமத்துவம் முதலான நீதிகளைப் பேசக்கூடிய
கபிலத் தேவர் அகவலையும் பெர்சிவல் ஆங்கிகலத்தில் மொழிபெயர்த்ததாக அறிய முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக