வெள்ளி, 2 செப்டம்பர், 2011

நாவல் குமாரகேசன்









சிந்தனைவயப்படும் சிரத்தை உள்ள கவிஞர்
த.பழமலய்
###

ஒருவர் கதைகளையோ கவிதைகளையோ எழுதித்தான் ஆக வேண்டுமா? நல்ல கேள்விதான்!

ஒருவர் எடுத்துரைப்பதும் இன்னொருவர் உள்வாங்கிக் கொள்வதும்,இப்படி எடுத்துரைத்துக் கொண்டும் உள்வாங்கிக் கொண்டும் இருப்பதற்காக அல்ல. இது, இருவரும் ஒன்றைப்ப்ற்றி ஒரு முடிவுக்கு – அப்போதைக்கு – வருவதற்கு ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வதே ஆகும்.

இத்தொகுதியில், கவிஞர் சில செய்திகளை நம்முடன் எடுத்து முன்வைத்துப் பேசுகிறார். அவை நம் அக்கறைக்கு உரியன.
உழவர்கள், நெசவாளர்கள், சிற்றூரார், நகரட்ர்ஹ்தார்,இளைஞர்கள், முதியவர்கள், தாயர்கள், தந்தையர்கள், உள்ளவர்கள், இல்லாதவர்கள், தம்பிகள், தங்கைகள், மரம், மாடு, காக்கை, குருவி, ஈ, எறும்பு....

கவிஞர், தான் கவனத்தில் கொள்ளும் உயிர்களுக்கான வாழ்வுரிமைகள், வழ்க்கைப் போராட்டங்கள் குறித்து அவ்வப்போதைக்கான தன் மனப்பதிவுகளை அவற்றுக்குப் பரிந்துரைக்கிறார். வாழையடிவாழை எனவரும் தன் காலத்தவர்களோடு தானும் கலந்துகொள்கிறார்.

இவ்வாறான பரிவுகள், கற்றுக்கொண்டவையாக இருக்கலாம். போலி உணர்ச்சிகள் என்று புறந்தள்ள முடியாதவை. மிகையாகத் தோன்றலாம். ஆனால், மனித மனங்களுக்கு வேண்டியவை.

சாலை ஓரத்துப் புளியமரங்களை நாம் மறக்க முடியாது. நாற்கர சாலை விரிவாக்கத்தால் அவை தங்கள் இருப்பை இழந்தன. என்றால், நாம் அவை தந்த இன் நிழலை இழந்தோம். இப்படி நாம் பேசிக்கொண்டிருக்கையில், அவை தங்களைப் பற்றி என்ன நினைக்கின்றன? இது சுவையான கேள்விதான். கவிஞர் விடை தருகிறார். இப்படியும் ஒரு கேள்வி இருக்கிறது. இதை நினைவூட்டுவதுதான் ந்ல்ல உரையாடல், நல்ல இலக்கியம்.

இதற்குத்தான் நமிடையில் இவரைப் போன்ற சிந்தனைவயப்படும் சிரத்தை உள்ள கவிஞர்கள் தேவைப்ப்டுகிறார்கள். ஒரு தேவையை இவர்கள் நிறைவு செய்கிறார்கள். இவர்கள் ந்ம் படிப்புக்கும் பாராடுதலுக்கும் உரியவர்கள்.
###

விழுப்புரம்,09.06.211

( நாவல் குமாரகேசனின் வெளிவர இருக்கும் சுழிக்காற்று கவிதைத் தொகுப்புக்காக கவிஞர் த.பழமலய் எழுதிய அணிந்துரை.) 

கருத்துகள் இல்லை: